படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி என தரமான படைப்புகளை தந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்பராஜ், கடந்த ஆண்டு 2019-ல் பேட்ட எனும் மாபெரும் வெற்றி படத்தை விருந்தளித்தார். 

Director Karthik Subbaraj On Petta 2 With Rajinikanth

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொங்கல் விருந்தாய் வெளியானது. விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்திருந்தனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்தார். முழுக்க முழுக்க ரஜினி படமாய் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. 

Director Karthik Subbaraj On Petta 2 With Rajinikanth

இந்நிலையில் பாலிவுட் லைஃப் பேட்டி ஒன்றில், பேட்ட 2 குறித்து பேசியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். பேட்ட படத்தில் பணியாற்றும் போது அதன் இரண்டாம் பாகம் பற்றிய யோசனை எதுவும் இல்லை. படம் வெளியானதும் இதன் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் மெசேஜ் செய்து வந்தனர். ஒரு சிலர் பேட்ட 2 கதை பற்றிய பதிவுகள் எல்லாம் செய்து சமூக வலைதளத்தில் தெரிவித்தனர். இப்போதைக்கு அதுபற்றிய யோசனை இல்லை. வருங்காலத்தில் நடக்கலாம் என்று தெரிவித்தார் கார்த்திக் சுப்பராஜ். தனுஷ் வைத்து ஜகமே தந்திரம் படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், அடுத்ததாக சியான் 60 படத்தை இயக்கவுள்ளார்.