தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மானின் 25வது திரைப்படமாக வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங் பெரியசாமி.கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து ரிது வர்மா கதாநாயகியாக நடிக்க விஜய் தொலைக்காட்சியின்  முன்னணி தொகுப்பாளரான ரக்சன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் இணைந்து நடித்திருந்தனர். 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் வாசுதேவ் மேனன் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான அகத்தியன் வான்மதி, காதல் கோட்டை ,கோகுலத்தில் சீதை என பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர். இவரது மகளான விஜயலட்சுமி அகத்தியன்  இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்த சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து தமிழில் அஞ்சாதே, வெண்ணிலா வீடு சென்னை 600028 ll  என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் இவரது தங்கையான நிரஞ்சனி அகத்தியன் தமிழ் சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகமாகி பல படங்களில் பணியாற்றி வந்த நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார். இத்திரைப்படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி மற்றும் நிரஞ்சனி அகத்தியன் இருவரும்  காதலித்து வந்த நிலையில் இவர்களது  காதல் சமீபத்தில் காதல் திருமணமாக நடந்து முடிந்தது. 

அந்தத் திருமணத்தின் அழகான ஒரு வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. நிரஞ்சனி அகத்தியனின் சகோதரியான விஜயலட்சுமி அகத்தியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த அழகான திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.