இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் இயக்குனர் , ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவின் உதவி இயக்குனராக தன் பணியை தொடங்கிய இயக்குனர் பாலா, தொடர்ந்து தன் திரைப்படங்களின் வாயிலாக மக்களின் மனதை தொட்டு தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராக வளர்ந்தார்.

director bala wishes new cm mk stalin on twitter

சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பாலா தொடர்ந்து நந்தா, பிதாமகன்,நான் கடவுள் ,பரதேசி என அவர் எடுத்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் பல விருதுகளையும் அள்ளிக் குவித்தது. பிதாமகன் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சியான் விக்ரம் தேசிய விருது பெற்றார் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த நான் கடவுள் திரைப்படம் மூலமாக இயக்குனர் பாலா முதல் முறையாக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்றார் . 

இந்நிலையில் சமீபத்தில்  இயக்குனர் பாலா ட்விட்டரில் நுழைந்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் பதிவாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவில்,

“மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,

தேவையற்ற வாழ்த்துரைகள்  தெரிவிப்பதை தவிருங்கள் எனக் கேட்டுக் கொண்டீர்கள்,ஆனாலும் இதை தவிர்க்க முடியவில்லை.தங்களின் ஆற்றல் செயல் மற்றும் அன்பான நடவடிக்கைகள் மனித நாகரீகத்தின் உச்சம்.

நன்றிகள் 

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் 

கோனோக்கி  வாழுங் குடி . 

என்ற திருக்குறளையும் மேற்கோள் காட்டி பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் பாலாவின் ட்விட்டர் வருகை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.