இந்திய சினிமாவில் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக வளம் வரும் இயக்குனர் அட்லீ, ஆர்யா - நயன்தாரா - ஜெய் மூவரும் இணைந்து நடித்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தனது இரண்டாவது திரைப்படத்திலேயே தளபதி விஜய் உடன் இணைந்தார். தளபதி விஜய் - அட்லீ கூட்டணியின் முதல் படமாக வெளிவந்த தெறி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.

இதனை அடுத்து மீண்டும் இரண்டாவது முறை இணைந்த விஜய் - அட்லீ கூட்டணியில் உருவான மெர்சல் திரைப்படம் மெகா ஹிட் ஆனது. இந்த வெற்றிக் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக தயாராகி வெளிவந்த பிகில் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வசூல் சாதனை படைத்தது. தனது வெற்றி பயணத்தின் அடுத்த கட்டமாக தற்போது பாலிவுட்டில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல நடிகையான ப்ரியாவை இயக்குனர் அட்லி காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்த எட்டு ஆண்டுகளாக மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கையை தொடரும் அட்லீ மற்றும் பிரியா தங்களது 8வது திருமண நாளை சமீபத்தில் கொண்டாடினர்.

இந்நிலையில் தற்போது பிறந்தநாள் கொண்டாடும் தனது மனைவி பிரியாவிற்கு ஸ்பெஷலாக வாழ்த்து தெரிவித்து இயக்குனர் அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “வாழ்க்கை என்பதே சந்தோஷம் தான் சந்தோஷத்திற்கு ஒரு வடிவம் இருந்தால் அது நீதான்” எனக் குறிப்பிட்டு தனது காதல் மனைவிக்கான பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார் அட்லீ. அட்லின் அந்த பதிவும் வைரலாகும் அந்த வீடியோவும் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Atlee (@atlee47)