தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அட்லீ, ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து முதல் முறையாக தளபதி விஜய் உடன் இணைந்த இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளிவந்த தெறி திரைப்படம் சூப்பர் ஹிட்டாக தொடர்ந்து இரண்டாவது முறையாக தளபதி விஜய் உடன் இணைந்த அட்லீ இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் மெகா ஹிட்டானது.

மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்த அட்லீ - விஜய் கூட்டணியில் உருவான பிகில் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனையடுத்து தற்போது பாலிவுட்டில் இயக்குனராக களம் இறங்கியிருக்கும் இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல நடிகையான ப்ரியாவை இயக்குனர் அட்லி காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது இயக்குனர் அட்லீ மற்றும் பிரியா இருவரும் தங்களது 8வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். இது குறித்து இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இயக்குனர் அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் மனைவி ப்ரியாவை குறிப்பிட்டு ரொமான்டிக்காக பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “இது நமது 8வது திருமண நாள். இந்த பயணம் என்னை ஒரு இளைஞனிலிருந்து ஒரு ஆளாக மாற்றியது. நமது வாழ்க்கையை நாம் அடித்தளத்தில் இருந்து ஆரம்பித்திருக்கிறோம். இப்போது நாம் அடைந்திருக்கும் இந்த உயரம் உன்னிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பொறுமையாலும் நெறிமுறைகளாலும் கிடைத்தது. நாம் இருவரும் இணைந்து இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும். அழகிய தோழியாக இருப்பதற்கும் அனைத்திற்கும் நன்றி!” என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இதோ…
 

It is our 8 th wedding anniversary, this journey has made me from boy to a man@priyaatlee we started our life from scratch and wat all we have today is all ur patience ethics I learned from u long way too go and conquer
Thanks for being a beautiful friend & everything pic.twitter.com/tjRAKNb9lO

— atlee (@Atlee_dir) November 9, 2022