தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர், பாடகர், பாடலாசிரியர் & இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் அருண்ராஜா காமராஜ், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்க கிரிக்கெட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் படமாக வெளிவந்த கனா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கினார்.

தொடர்ந்து பாலிவுடில் சூப்பர் ஹிட்டான ஆர்டிகள் 16 திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கிய நெஞ்சுக்கு நீதி திரைப்படமும் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. முன்னதாக அருண் ராஜா காமராஜின் அமெரிக்கன் மாப்பிள்ளை வெப் சீரிஸ் விரைவில் Disney+ hotstar தளத்தில் வெளிவர தயாராகி வருகிறது.

இதனிடையே அருண் ராஜா காமராஜ் இயக்கும் அடுத்த புதிய வெப் சீரிஸின் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. இந்த புதிய வெப் சீரிஸில் நடிகர் ஜெய் மற்றும் நடிகை தன்யா ஹோப் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். ஏற்கனவே ஜெய் நடித்த ட்ரிபிள்ஸ் வெப் சீரிஸ் Disney+ ஹாட்ஸ்டாரில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் ஜெய் நடிப்பில் பிரேக்கிங் நியூஸ், 1 கிமீ மற்றும் இயக்குனர் கோபி நயனாரின் புதிய படம் ஆகியவை தயாராகி வருகின்றன. இந்நிலையில் தற்போது இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் புதிய வெப்சீரிஸின் தகவல் தற்போது வெளிவந்திருக்கும் நிலையில், இது குறித்த இதர தகவல்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.