தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து அதற்கு ஏற்றவாறு அசத்தலான படைப்புக்களை தரும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் அறிவழகன். இவரது இயக்கத்தில் வெளியான ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 போன்ற சிறப்பான படங்கள் கொண்டு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார். 

arivazhagan

இந்நிலையில் இயக்குனர் அறிவழகன் தனது ட்விட்டர் பக்கத்தில், இப்பொழுதும் செய்தித்தாள்களில் அலைபாயுதே ஸ்டைலில் திருமணம் என்று செய்திகள் வெளியாகிறது. இந்த படம் கலாச்சார ரீதியான அதிர்ச்சியை திரையில் கொண்டு விதத்தில் பதிவு செய்த விதத்தில் இப்பொழுதும் சிறப்பானதாக இருக்கிறது. அது தான் மணிரத்னம் சார். பச்சை நிறமே டிஐ செய்யப்படாத இந்த பாடல் பி.சி.ஸ்ரீராமில் இருக்கும் கலையை காட்டுகிறது என்று பதிவு செய்துள்ளார். 

Alaipayuthey

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000- ம் ஆண்டு வெளியான படம் அலைபாயுதே. இந்த படம் இன்றளவும் கொண்டாடப்படுவதற்கு காரணம் இதன் கதைக்கரு. காதலை யதார்த்தமாக செதுக்கியிருப்பார் இயக்குனர்.