ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சர்வர் சுந்தரம் பட இயக்குனர் ! மேலும் படிக்க...
By Sakthi Priyan | Galatta | February 15, 2020 17:51 PM IST

தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து ஹீரோவாக திகழ்பவர் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் கடைசியாக டகால்டி படம் வெளியானது. தற்போது ஆர். கண்ணன் இயக்கத்தில் பிஸ்கோத் படத்தில் நடித்து வருகிறார்.
பால்கி இயக்கத்தில் கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சந்தானம் நடித்த படம் சர்வர் சுந்தரம். வைபவி ஜோடியாக நடித்திருந்தார். பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பாட், மாயா சுந்தரகிருஷ்ணன், பூனம் ஷா, பிரியங்கா ஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தற்போது படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி, ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். வெகு நாட்கள் படம் திரைக்கு வராமல் தாமதமாகிக்கொண்டிருப்பதால் இப்பதிவை செய்துள்ளார். வேறொருவர் செய்த தவறுக்கு தான் பழியேற்பது போல் உள்ளது என கூறியுள்ளார். விரைவில் படம் குறித்த அப்டேட்டுடன் வருவதாகவும் தெரிவித்தார்.