தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஜெயம் ரவி அடுத்ததாக இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் காமெடி என்டர்டெய்னர் படமாக தயாராகும் JR30 படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து ஜெயம்ரவி நடிக்கும் ஆக்சன் திரில்லர் படமான சைரன் திரைப்படமும் அடுத்து தயாராகிறது.

முன்னதாக ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் எனும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளிவரும் பொன்னியின் செல்வனின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

இதனையடுத்து இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம்ரவி கதாநாயகனாக நடித்த அகிலன் திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே வாமனன்,  என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய இயக்குனர் அஹமத் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஜெயம் ரவி நடிக்கிறார். முன்னதாக அஹமத் இயக்கத்தில் டாப்ஸி, அர்ஜுன், MS.பாஸ்கர் ஆகியோர் ஜெயம்ரவியுடன் நடிக்கும் ஜனகணமன திரைப்படம் தயாராகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர் அஹமத், “இரண்டு திரைப்படங்கள் மற்றும் தொடரும்... இறைவன் விரைவில்…” என குறிப்பிட்டுள்ளார். எனவே நீண்ட காலமாக சமூக வலைதளங்களில் ஜெயம் ரவி-அஹமத் இணையும் திரைப்படத்தின் டைட்டிலாக "இறைவன்" பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அதனை இயக்குனர் அஹமத் உறுதிப்படுத்தியுள்ளார். இயக்குனர் அஹமதின் அந்த பதிவு இதோ…
 

Two films and counting..#Iraivan Soon.❤️🙌 pic.twitter.com/GHCYBF3fDk

— Director Ahmed (@Ahmed_filmmaker) September 10, 2022