ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அத்ரங்கி ரே. இப்படத்தில் தனுஷுடன் அக்‌ஷைகுமார் மற்றும் சாரா அலிகான் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் மீண்டும் துவங்கவுள்ளது என அறிவித்துள்ளனர் படக்குழு. இந்த படத்தின் ஷுட்டிங் கடந்த மார்ச் மாதமே துவங்கி நடைபெற்று வந்தது. 

வாரணாசியில் சில முக்கிய இடங்களில் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு விட்டது. அதனை தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை படக்குழு துவங்கவுள்ளது. 

தமிழகத்தில் மதுரையில் இந்த ஷுட்டிங் துவங்கவுள்ளது என்ற சுவையூட்டும் தகவலும் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து இடைவெளியில்லாமல் மூன்று மாதங்களுக்கு படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். மேலும் மற்ற சில படங்கள் ஷூட்டிங் துவங்குவதாக கூறப்பட்டாலும் அவை ஸ்டுடியோவில் தான் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் ஆனந்த் எல் ராய், இந்த லாக்டவுன் நேரத்தில் நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டு இனி நடக்க உள்ள ஷூட்டிங்கிற்காக தயாராகி வந்தேன். இந்த படப்பிடிப்பில் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து தான் நடத்த உள்ளோம் என்று கூறியுள்ளார். இப்படியிருக்க தனுஷ் மற்றும் சாரா அலிகான் இருவரும் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாரணாசியில் முதல் கட்ட ஷூட்டிங் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்படுகிறது. 

அத்ரங்கி ரே படத்தில் சாரா அலி கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். படத்தின் கதை இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பது போல காட்டப்பட்டு இருக்கும் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் படத்தில் நடிகை டிம்பிள் ஹயாதி முக்கிய ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. 2017-ம் ஆண்டு வெளியான கல்ஃப் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை டிம்பிள் ஹயாதி. கடந்த ஆண்டு பிரபு தேவா நடிப்பில் வெளியான தேவி 2 படத்தில் நடித்திருந்தார். டிம்பிள் ஹயாதி நடிக்கும் முதல் ஹிந்தி படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.