மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் கடைசியாக உருவான படம் தில் பேச்சரா. சமீபத்தில் இப்படம் OTTதளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் சுஷாந்த் ஜோடியாக சஞ்சனா சங்கி நடித்திருந்தார். முகேஷ் சப்ரா இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். 

2014-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த The Fault in our Stars என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக்காக இருந்தாலும், தனது நடிப்பால் அனைவரையும் ஈர்த்துள்ளார் சுஷாந்த் சிங் ராஜ்புட். படத்தை பார்க்கையில் இப்படி பட்ட மனிதர் நம்மை விட்டு மறைந்து விட்டார் என்ற ஏக்கத்தில் உள்ளனர் அவரது ரசிகர்கள். 

காதலின் அழகிய வெளிப்பாடாக இந்த படம் அமைந்துள்ளது என ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். மோசக்காரர்களின் வெறுப்பால் ஒரு உயிர் அநியாயமாக போய்விட்டது. சுஷாந்தின் மரணத்திற்கு நீதி கிடைக்காமல் ஓய மாட்டோம் என்றெல்லாம் கமெண்ட் செய்தனர் சுஷாந்த் ரசிகர்கள். 

தற்போது இந்த படத்திலிருந்து மஸ்காரி பாடல் வீடியோ வெளியானது. சுனிதி சவுஹான் மற்றும் ஹ்ரிடே கட்டாணி பாடிய இந்த பாடல் வரிகளை அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார். நகைச்சுவையான இந்த பாடல் வீடியோ ரசிகர்களை ஈர்த்து வருகிறது. ஹீரோயின் சஞ்சனாவின் நடிப்பும் பிரமாதமாக உள்ளது. 

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் குறித்து மும்பை பந்த்ரா பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் சுஷாந்தின் காதலியான பாலிவுட் நடிகை ரியா சக்ரபர்த்தி மீது பாட்னா போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரியா மீது சுஷாந்தின் அப்பா கிருஷ்ண குமார் சிங் தான் புகார் அளித்துள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.