விஜய் டிவியின் காமெடியனாக இருந்து பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன்களில் ஒருவராக அவதரித்தவர் சந்தானம்.முன்னணி காமெடியனாக உயர்ந்த பின்னர் கதாநாயகனாகவும் உருவெடுத்தார் சந்தானம்.ஹீரோவாக இவர் நடித்த படங்களும் ஹிட் அடித்தன.கடைசியாக இவர் நடித்த பாரிஸ் ஜெயராஜ் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து சபாபதி,டிக்கிலோனா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார் சந்தானம்.இதில் டிக்கிலோனா படத்தை பலூன் பட இயக்குனர் ஸ்ரீனிஷ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.கார்த்திக் யோகி இந்த படத்தினை இயக்கியுள்ளார்.இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நட்பே துணை புகழ் அனகா,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா புகழ் ஷிரின் இருவரும் ஹீரோயினாக நடித்துள்ளனர்.யோகி பாபு,ஆனந்தராஜ்,முனீஷ்காந்த்,மொட்ட ராஜேந்திரன்,நிழல்கள் ரவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படம் நேரடியாக ஜீ5 தளத்தில் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில் இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்