தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார் நடிகர் துருவ் விக்ரம். தனது முதல் திரைப்படமாக தெலுங்கில் மெகா ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக ஆதித்யா வர்மா திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்து அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

அடுத்ததாக தனது 2வது படத்தில் தந்தையான சீயான் விக்ரம் உடன் இணைந்த துருவ் விக்ரம் மகான் திரைப்படத்தில் நடித்தார். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த மகான் திரைப்படத்தில் தாதா எனும் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார். இதனைத்தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சுயாதீன இசை கலைஞராகவும் தனது முதல் மியூசிக் வீடியோவாக மனசே பாடலை நேற்று செப்டம்பர் 22ஆம் தேதி துருவ் விக்ரம் வெளியிட்டார். முன்னதாக இன்று செப்டம்பர் 23ஆம் தேதி துருவ் விக்ரம் தனது 26வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கலாட்டா குழுமம் நடிகர் துருவ் விக்ரமுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துருவ் விக்ரம் கல்லூரி மாணவிகளுடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். மேலும் கலந்துரையாடியும் பாட்டு பாடியும் அனைவரையும் மகிழ்வித்தார். மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் துருவ் விக்ரம் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் இதோ…
 

Multi talented Star Dhruv Vikram celebrated his BD at WCC, Chennai #HBDDhruvVikram pic.twitter.com/JIJFJnx1GY

— FridayCinema (@FridayCinemaOrg) September 23, 2022

Scores of college students at the WCC greeted charming hero #DhruvVikram, who was the Chief Guest at the college's #BattleFest22 event. The students greeted the star on the occasion of his b'day today. A small celebration was organised as part of which the actor also cut a cake. pic.twitter.com/2mH1L8KOQ7

— Yuvraaj (@proyuvraaj) September 23, 2022