பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தவர் திவ்யா துரைசாமி.செய்தி வாசிப்பாளராக இருந்தபோதே ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார் திவ்யா.அடுத்ததாக ஹரிஷ் கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார்.

இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவ் ஆக இருக்கும் திவ்யா துரைசாமி அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.லாக்டவுன் நேரத்தில் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிறைய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகின.இதனை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் திவ்யா.

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கவுள்ளார் திவ்யா துரைசாமி.இவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த மதில் திரைப்படம் ஜீ5 தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் திவ்யா துரைசாமி.

இவரது த்ரோபேக் போட்டோஷூட் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வேற லெவெலில் தற்போது ட்ரெண்ட் அடித்து வருகிறது.சேலையில் செம ஹாட்டாக இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் தீயாக பரவி வருகிறது.இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்