விஜய் டிவியின் அவளும் நானும் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தர்ஷா குப்தா.தொடர்ந்து ஜீ தமிழில் முள்ளும் மலரும்,சன் டிவியின் மின்னலே உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானார்.விஜய் டிவி சமீபத்தில் செந்தூரப்பூவே என்ற தொடரின் ஒளிபரப்பை தொடங்கியது.

ரஞ்சித் ஹீரோவாகவும்,ஸ்ரீநிதி ஹீரோயினாகவும் இந்த தொடரில் நடித்து வருகின்றனர்.இந்த தொடரில் தர்ஷா குப்தா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இந்த தொடரின் ஒளிபரப்பு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டது.கடந்த மார்ச் மாதத்தில் ஒளிபரப்பை தொடங்கிய இந்த தொடர் கொரோனா காரணாமாக நிறுத்தப்பட்டது.பின்னர் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பு தொடங்கியபோது மீண்டும் இந்த தொடரின் ஒளிபரப்பு முதலில் இருந்து தொடங்கியது.

மார்ச் மாதம் பாதிக்கப்பட்ட ஷூட்டிங் மூன்று மாதங்களுக்கு பிறகு ஜூலையில் அரசு அறிவித்த தளர்வுகளோடு , பாதுகாப்பான முறையில் ஷூட்டிங் தொடங்கியது,கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் புது எபிசோடுகள் விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.சீரியலில் நடிக்கும் நடிகர்,நடிகைகளும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.

லாக்டவுன் நேரத்தில் கொரோனா அளவுக்கு பிரபலமாக இருந்தவர் தர்ஷா குப்தா அவர் போடும் போட்டோக்களுக்கும்,டிக்டாக் வீடியோக்களுக்கும் லைக்குகள் குவிந்து வந்தனர்.லாக்டவுன் நேரத்தில் அதிக ரசிகர்களை தர்ஷா பெற்றுவிட்டார்.அவ்ரகளுடன் அவ்வப்போது கலந்துரையாடி ரசிகர்களை மகிழ்விப்பார் தர்ஷா.தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தர்ஷா நீச்சல்குளத்தில் எடுக்கப்பட்ட போட்டோஷூட்டின் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.இந்த புகைப்படங்கள் கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

💗💛Love yourself first, because that's who you will spend rest of ur life with💛💗

A post shared by Dharsha (@dharshagupta) on