ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகிய திரைப்படம் தாராள பிரபு. பிரபல ஹிந்தி படமான விக்கி டோனார் படத்தின் தமிழ் ரீமேக்காகும். இதில் தான்யா ஹோப் நாயகியாக நடித்துள்ளார். படத்தில் சின்ன கலைவானர் விவேக் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். ஹீரோ பணத்திற்காக விந்தணுவை தானம் செய்பவர் என்பது தான் கதைக்கரு. கிருஷ்ணா மாரிமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். 

dharalaprabhu

ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு 8 இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இசையமைக்கவுள்ளனர். விவேக் - மெர்வின், பிரதீப் குமாரின் ஊர்கா இசைக்குழு, இன்னொ கெங்கா, ஷான் ரோல்டன், பரத் ஷங்கர், கபேர் வாசுகி, அனிருத், மேட்லீ ப்ளூஸ் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். 

HarishKalyan

மார்ச் 13-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றது. கொரோனா வைரஸ் பாதித்து ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இப்படம் மீண்டும் திரைக்கு வரும் என்று கூறப்பட்டது. தற்போது அமேசான் ப்ரைமில் வரும் 9-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.