தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் கடைசியாக தனுசு ராசி நேயர்களே திரைப்படம் வெளியானது. தற்போது ஹிந்தியில் வெளியாகி ஹிட் அடித்த விக்கி டோனார் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். தாராள பிரபு என தமிழில் வெளியாகிறது. ஹிந்தியில் யாமி கவுதம் நடித்த பாத்திரத்தில் தான்யா ஹோப் நடிக்கவுள்ளார். ஹீரோ பணத்திற்காக விந்தணுவை தானம் செய்பவர் என்பது தான் கதைக்கரு. கிருஷ்ணா மாரிமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.

harishkalyan harishkalyan

ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தில் நடிகர் விவேக் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 8 இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இசையமைக்கவுள்ளனர். விவேக் - மெர்வின், பிரதீப் குமாரின் ஊர்கா இசைக்குழு, இன்னொ கெங்கா, ஷான் ரோல்டன், பரத் ஷங்கர், கபேர் வாசுகி, அனிருத், மேட்லீ ப்ளூஸ் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். 

harishkalyan

படத்தின் டீஸர் முதல் சிங்கிளான ஆஹா ஓஹோ பாடல் சமீபத்தில் வெளியானது. தற்போது உன்னால் பெண்ணே பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. இன்னொ கெங்கா பாடிய இந்த பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். நடிகை சமந்தா இந்த பாடலை வெளியிட்டார்.