விக்கி டோனார் ரீமேக் தமிழில் தாராள பிரபு என உருவாகியுள்ளது. ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் தான்யா ஹோப் நாயகியாக நடிக்கிறார். ஹீரோ பணத்திற்காக விந்தணுவை தானம் செய்பவர் என்பது தான் கதைக்கரு. கிருஷ்ணா மாரிமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.

dharalaprabhu dharalaprabhu

ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தில் சின்ன கலைவானர் நடிகர் விவேக் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 8 இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இசையமைக்கவுள்ளனர். விவேக் - மெர்வின், பிரதீப் குமாரின் ஊர்கா இசைக்குழு, இன்னொ கெங்கா, ஷான் ரோல்டன், பரத் ஷங்கர், கபேர் வாசுகி, அனிருத், மேட்லீ ப்ளூஸ் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். 

dharalaprabhu

மார்ச் 13-ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து பாடிய தாராள பிரபு பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. விக்னேஷ் சிவன் இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடல் குத்து பாடல் என்று ஹரிஷ் கல்யாண் பதிவு செய்துள்ளார்.