அருண் விஜய் நடித்த தடம் படத்தில் அறிமுகமானவர் தன்யா ஹோப்.இந்த படத்திலேயே இளைஞர்களின் கனவுக்கன்னியாக அவதரித்து விட்டார்.இன்ஸ்டாகிராமில் இவர் போடும் போட்டோக்களும்,வீடியோக்களும் லைக்களை அள்ளி வந்தன.

இதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான தாராள பிரபு படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார்.

கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் அவ்வப்போது தனது நடன வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.தற்போது இவர் நடனமாடும் போது நடந்த சிக்கல்கள்,மிஸ்ஸான ஸ்டெப்புகள் குறித்த வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.கடந்த மாதம் நிறைய நடன விடீயோக்களை பதிவிட்ட தான்யா ஹோப் தற்போது அந்த நடனமாடும்போது ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து இந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.தலைகுப்பற கீழே விழுவது போலவும் பதிவிட்டுள்ள அவர் அடுத்ததடவை நெக் brace வைத்துக்கொண்டு இதெல்லாம் பண்ணவேண்டும் என்று கடைசியாக பதிவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து ஒரு சிறிய பிரேக்கிற்கு பிறகு தற்போது பிரபல இங்கிலிஷ் சூப்பர்ஹிட் பாடல் ஒன்றிற்கு நடனமாடும் வீடீயோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தான்யா ஹோப்.இவரது அசத்தலான நடன அசைவுகள் ரசிகர்களிடம் நல்லாவே வரவேற்புகளை பெற்று இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தான்யா ஹோப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட இந்த அசத்தலான நடன வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

this feeling that I can’t fight

A post shared by Tanya Hope (@hope.tanya) on