தொடர்ச்சியாக ரொமான்டிக் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் கடைசியாக தனுசு ராசி நேயர்களே திரைப்படம் வெளியானது. சஞ்சய் பாரதி இந்த படத்தை இயக்கியிருந்தார். தற்போது ஹிந்தியில் வெளியாகி ஹிட் அடித்த விக்கி டோனார் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். தாராள பிரபு என தமிழில் வெளியாகிறது. 

dharalaprabhu harishkalyan

ஹிந்தியில் யாமி கவுதம் நடித்த பாத்திரத்தில் தான்யா ஹோப் நடிக்கவுள்ளார். ஹீரோ பணத்திற்காக விந்தணுவை தானம் செய்பவர் என்பது தான் கதைக்கரு. கிருஷ்ணா மாரிமுத்து இந்த படத்தை இயக்கி வருகிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தில் நடிகர் விவேக் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 8 இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இசையமைக்கவுள்ளனர். விவேக் - மெர்வின், பிரதீப் குமாரின் ஊர்கா இசைக்குழு, இன்னொ கெங்கா, ஷான் ரோல்டன், பரத் ஷங்கர், கபேர் வாசுகி, அனிருத், மேட்லீ ப்ளூஸ் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். 

dharalaprabhu

பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. தற்போது படத்தின் முதல் சிங்கிள் ஆஹா ஓஹோ பாடல் வெளியானது. பரத் ஷங்கர் எழுதி பாடியுள்ளார்.