ஹரீஷ் கல்யாண் பளிச் ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் தனுசு ராசி நேயர்களே. இந்த படத்தை இயக்குனரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

harishkalyan

இந்த படம் ரொமாண்டிக் காமெடி கதையாக வந்திருக்கிறது. இதில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது, தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

harishkalyan

படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரிலீஸ் தகவல் தெரியவந்தது. இந்த படம் வரும் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இந்த படத்தின் ஆடியோ லான்ச்சில் பேசிய ஹரீஷ் கல்யாண் வீடியோ இணையத்தை ஈர்த்து வருகிறது. வீடியோ லிங்க் கீழே உள்ளது.