பட்டாஸ் படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த D40 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து தனுஷ் இயக்குனர் மாரி செல்வராஜுடன் கர்ணன் படத்தில் பணிபுரிந்து வருகிறார். 

dhanush

கடந்த 2013-ம் ஆண்டு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார் தனுஷ். பிறகு பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சனுடன் ஷமிதாப் என்ற படத்தில்  நடித்தார். தற்போது மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற சுவையூட்டும் செய்தி தெரியவந்தது. இதில் தனுஷுடன் அக்‌ஷைகுமார் மற்றும் சாரா அலிகான் நடிக்கின்றனர். 

akshaykumar dhanush

ஹிமான்ஷு ஷர்மா கதை எழுதியுள்ளார். படத்திற்கு அத்ரங்கி ரே என்ற டைட்டிலை வைத்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மார்ச் முதல் வாரத்திலிருந்து படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக தகவல் தெரியவந்தது.