தமிழ் திரையுலகின் ஆகச் சிறந்த நடிகராக விளங்கும் நடிகர் தனுஷ். அடுத்ததாக மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் திருச்சிற்றம்பலம் மற்றும் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட்டான அசுரன் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷ் தற்போது சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். 

ஏற்கனவே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த ஆடுகளம் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது பெற்ற தனுஷுக்கு நடிகராக இது 2-வது தேசிய விருது.சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அசுரன் படத்திற்காக தயாரிப்பாளர் கலைப்புலி.S.தாணு மற்றும் வெற்றிமாறன் ஆகியோருக்கும் என்று தேசிய விருது வழங்கப்பட்டது. 

மேலும் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்த  சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிபடுத்திய மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு துணை நடிகருக்கான தேசிய விருதும் இன்று வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.