தனுஷின் அதிரடியான அசுரன் ட்ரைலர் வெளியீடு !
By Aravind Selvam | Galatta | September 08, 2019 18:46 PM IST

வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனுடன் தனுஷ் மீண்டும் இணையும் படம் அசுரன்.இந்த படத்தை கலைப்புலி தாணுவின் V Creations நிறுவனம் தயாரிக்கிறது.மலையாள நடிகை மஞ்சு வாரியர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.G.V.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
பசுபதி,பாலாஜி சக்திவேல்,ஆடுகளம் நரேன்,பவன்,அம்மு அபிராமி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.தனுஷ் இரட்டை வேடங்களில் அசத்தும் இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்