தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.கடைசியாக இவரது மாறன்,தி கிரே மேன்  படங்கள் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம்,வாத்தி என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.திருச்சிற்றம்பலம் படம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

அடுத்ததாக தனுஷ் சித்தாரா என்டேர்டைன்மென்ட்ஸ் மற்றும் Fortune Four சினிமாஸ் இணைந்து தயாரிக்கும்  வாத்தி,SIR படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார்.இந்த படம் தமிழ்,தெலுங்கில் bilingual ஆக உருவாகிறது.இந்த படத்திற்கு தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் Sir என்றும் பெயரிட்டுள்ளனர்.மலையாள நடிகை சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார்.

ஜீ.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.தற்போது இந்த படத்தின் விறுவிறுப்பான டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.ரசிகர்களிடம் லைக்குகளை அள்ளிவரும் இந்த டீஸரை கீழே உள்ள லிங்கில் காணலாம்