தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் தம்பியாக நடித்தவர் ரிஷிகேஷ். இவர் நாயகனாக நடித்துள்ள படம் உணர்வுகள் தொடர்கதை. பாலு சர்மா இந்த படத்தை இயக்குகிறார். சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பரத் ராம் இந்த படத்தை தயாரிக்கிறார். ரிஷிகேஷ் ஜோடியாக செர்லின் சேத் நடிக்கிறார்.  

கடந்த 2017-ம் ஆண்டு பெமினா மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் ஷெர்லின் செத். இவர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். சுந்தர் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பணிக்கு செல்லும் கணவன், மனைவிக்குள் நடக்கும் சம்பவங்களை கொண்டு உருவாகி வருகிறது இப்படம். 

இதில் நடிப்பதற்காக ஷெர்லின் செத் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் குறிப்பிடத்தக்க விஷயம் ஆறு இசையமைப்பாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் விவேக் மெர்வின், தர்புகா சிவா, சக்தி ஸ்ரீ கோபாலன், இந்நோ கெங்கோ, சுனில் வருண் ஆவர். தற்போது இந்த படத்திலிருந்து கோப காணல்கள் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது. தனுஷ் இந்த பாடலை வெளியிடுகிறார். ரம் படத்திலே ரிஷிகேஷின் நடிப்பை பாராட்டிய ரசிகர்கள், இந்த படத்தின் ரிலீஸுக்கும் ஆவலாக உள்ளனர்.