வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் D40 படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.லண்டனில் நடைபெற்று வந்த இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை திரும்பிய நடிகர் தனுஷ் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பட்டாஸ் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்தார்.

dhanush

எதிர் நீச்சல், கொடி போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் என்பது நாம் அறிந்தவையே. இத்திரைப்படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இணை இசையமைக்கின்றனர்.

pattas

இதில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகவும், ஜோடியாக நடிகை சினேகா மற்றும் மெஹ்ரீன் பிர்ஸாடா ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது படத்தின் இன்ட்ரோ பாடலை நடிகர் தனுஷே பாடியுள்ளதாக தகவல் தெரியவந்தது.