தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவரது நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படம் சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம்,வாத்தி,கேப்டன் மில்லர்,தி கிரே மேன் 2 என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.இந்த படத்தினை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார்.நித்யா மேனன்,ராஷி கண்ணா,ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட மூன்று நாயகிகள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் பின்னணி இசை அடங்கிய OST வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த OST வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்