தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவரது ஜகமே தந்திரம் படம் சமீபத்தில் OTT-யில் வெளியானது.

இதனை தொடர்ந்து தனுஷ் மாறன்,அத்ராங்கி ரே,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.இந்த படத்தினை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார்.நித்யா மேனன்,ராஷி கண்ணா,ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட மூன்று நாயகிகள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் 5ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது.இந்த படத்தின் ஷூட்டிங்கில் சமீபத்தில் ராஷி கண்ணா இணைந்தார்.தற்போது தனுஷ் சென்னையின் பிரபல திரையரங்கமான கமலா திரையரங்கத்தில் இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட சில புகைப்படங்கள் வெளியாகி செம வைரலாகி வருகிறது.