திருச்சிற்றம்பலம் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம் !
By Aravind Selvam | Galatta | July 26, 2022 14:26 PM IST

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவரது நடிப்பில் மாறன் படம் கடைசியாக வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.இந்த படத்தினை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார்.நித்யா மேனன்,ராஷி கண்ணா,ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட மூன்று நாயகிகள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பிரபல விநியோக நிறுவனமான ஐங்கரன் இன்டர்நேஷனல் கைப்பற்றியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்த போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
Excited to announce that we have acquired the overseas distribution of @dhanushkraja's #Thiruchitrambalam 🙌💥@anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @omdop @editor_prasanna @jacki_art @theSreyas @sunpictures pic.twitter.com/VRGWNM1V6s
— Ayngaran International (@Ayngaran_offl) July 25, 2022
Dhanush's Thiruchitrambalam's release gets a massive update - find out more!!
26/07/2022 05:43 PM
Dhanush's Thiruchitrambalam - New Romantic Song Out | watch the video here
15/07/2022 06:23 PM