கடந்த 20 வருடங்களாக தனது கடின உழைப்பால் ஆகச்சிறந்த நடிகராக உயர்ந்திருக்கும் நடிகர் தனுஷ் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் & தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக தொடர்ந்து தமிழ் மட்டுமில்லாது பிற மொழி சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

முன்னதாக ஹாலிவுட்டில் தனுஷ் நடித்த தி க்ரே மேன் திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு ரிலீஸாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் தனுஷின் பிறந்தநாளான நேற்று (ஜூலை28) வெளியானது.

மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்திருக்கும் திருச்சிற்றம்பலம் வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. அடுத்ததாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே நேற்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் தனுஷுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் ரசிகர்களும் மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இந்நிலையில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தனுஷ் தனது உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “கடந்த 20 ஆண்டுகளாக எனக்கு துணை நிற்கும் ரசிகர்கள் தான் எனது நம்பிக்கை” என குறிப்பிட்டு தனுஷ் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். தனுஷின் அந்த முழு அறிக்கையை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

🙏🙏🙏 pic.twitter.com/8XZJd41GYl

— Dhanush (@dhanushkraja) July 29, 2022