தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவரது ஜகமே தந்திரம் படம் சமீபத்தில் OTT-யில் வெளியானது.

இதனை தொடர்ந்து தனுஷ் மாறன்,அத்ராங்கி ரே,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

தனுஷ் Netflix தயாரிப்பில் உருவாகும் The Gray Man என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தினை avengers படத்தினை இயக்கிய Russo Brothers இயக்குகின்றனர்.உலகிலேயே அதிக பட்ஜெட் கொண்ட படமாக இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தில் பல முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

தி கிரே மேன் படத்தின் முக்கால்வாசி ஷூட்டிங்கை நிறைவு செய்து தனுஷ் சில மாதங்களுக்கு முன் இந்தியா திரும்பினார்.தற்போது மீண்டும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷ் கலந்துகொண்டு வருகிறார்.இந்த ஷூட்டிங்கில் இருந்து ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.