திரையுலகில் நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், திரைப்பட இயக்குனர் என பல திறமைகள் கொண்டவர் பிரபுதேவா . தற்போது இவரும் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷும் அமர்ந்து கதை பேசுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கடந்த ஆண்டு பிரபுதேவாவின் நடன இயக்கத்தில் தனுஷ் ,சாய் பல்லவி நடனத்தில் வெளியான ரவுடி பேபி பாடல் தற்போது வரை 26 கோடி ரசிகர்களை சென்றடைந்துள்ளது . இணையத்தில் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பாடல் என்ற பெருமையையும் இந்த பாடல் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் மற்றும் பிரபு தேவா இருக்கும் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள். இந்த காம்போ திரையில் இணைந்தால் எப்படி இருக்கும் ? என்ற கேள்வியை முன்வைத்துள்ளனர். தனுஷ் இயக்கத்தில் பிரபு தேவா அல்லது பிரபு தேவா இயக்கத்தில் தனுஷ் நடித்தால் நிச்சயம் ரசிகர்களை கவரும் விதமாக இருக்கும் என்று கூறி வருகின்றனர் திரை ரசிகர்கள். 

பிரபு தேவா இயக்கத்தில் சல்மான்கான் நடித்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் ராதே. இந்த படத்தில் திஷா பட்டானி, ரந்தீப் ஹூடா, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் பரத் முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படம் சென்ற மே 22-ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 

இயக்கத்தில் அசத்தி வரும் பிரபு தேவா தற்போது நடித்து வரும் திரைப்படம் பஹீரா. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்தர் இயக்கி வருகிறார். பிப்ரவரி 14-ம் தேதியான காதலர் தினத்தன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பரதன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் மொட்டையடித்த கெட்டப்புடன் பிரபுதேவா இருக்கும் போஸ்டர் வெளியானது. 

கணேசன் சேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டிங் செய்கிறார். படத்தில் நடிகை காயத்ரி படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். அனேகன் படத்தில் நடித்த அமைரா தாஸ்தூரும் இந்த படத்தில் ஒரு சூப்பரான ரோலில் நடிக்கிறார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhanush (@dhanushkraja)