இந்திய திரை உலகின் இன்றியமையாத நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் தனுஷ் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவெஞ்சர்ஸ் என்டு கேம் பட இயக்குனர்களான ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தி க்ரே மேன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தி க்ரே மேன் திரைப்படம் வருகிற ஜூலை 15ஆம் தேதி குறிப்பிடப்படும் சில திரையரங்குகளிலும், ஜூலை 22ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகி வரும் வாத்தி(SIR) திரைப்படத்தில் தற்போது தனுஷ் நடித்து வருகிறார்.

இதனிடையே நடிகர் தனுஷ் தனது மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா இருவருடனும் இணைந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளார். தனது செல்ல மகன் லிங்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து மகன்களுடன் கிரிக்கெட் விளையாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனுஷ் பதிவிட்டுள்ளார். வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Dhanush (@dhanushkraja)