துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பட்டாஸ். இத்திரைப்படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இணைந்து இசையமைக்கின்றனர். இதில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகவும், ஜோடியாக நடிகை சினேகா மற்றும் மெஹ்ரீன் பிர்ஸாடா ஆகியோர் நடித்துள்ளனர். 

pattas dhanush pattas

எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி போன்ற அசத்தலான படைப்புக்களை தந்தவர் இந்த படத்திலும் அசத்தியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இப்படம் 16 ஜனவரி 2020-ல் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. 

dhanush sneha dhanush Dhanush dhanush

படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தை ஈர்த்து வருகிறது.