அசுரன் படத்தின் வெற்றியை அடுத்து தனுஷ் துரை செந்தில்குமார் இயக்கும் பட்டாஸ் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.ஹீரோயினாக சினேகா,மெஹரீன் பிர்சாடா இருவரும் நடித்துள்ளனர்.

Dhanush Pattas Digital Rights Sold To Amazon Prime

பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

Dhanush Pattas Digital Rights Sold To Amazon Prime

இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் ஜனவரி 15ஆம் தேதி  
 பொங்கலன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.தனுஷின் சமீபத்திய ஹிட் படமான அசுரன் படத்தையும் அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush Pattas Digital Rights Sold To Amazon Prime