அசுரன் படத்தின் அசுர வெற்றியை அடுத்து தனுஷ் எதிர்நீச்சல்,காக்கி சட்டை,கொடி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் கடந்த ஜனவரி 15ஆம் தேதி பொங்கலையொட்டி வெளியானது.இந்த படத்தில் தனுஷ் அப்பா மகன் என்று இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இந்த படத்தில் ஹீரோயினாக சினேகா,மெஹரீன் பிர்சாடா இருவரும் நடித்துள்ளனர்.பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிதந்திருந்தனர்.விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.இந்த படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தனுஷ் ஜகமே தந்திரம்,கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.மேலும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள D44 படங்களில் நடிக்கவுள்ளார்.இதனை தவிர அத்ரங்கி ரே என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.ஜகமே தந்திரம் படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது தனுஷின் சூப்பர்ஹிட் படமான பட்டாஸ் படத்தில் இவரது ஓப்பனிங் பாடலான சில் ப்ரோ பாடல் வீடியோ யூடியூப்பில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.