தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவரது நடிப்பில் மாறன் படம் கடைசியாக வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.திருச்சிற்றம்பலம் படம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தற்போது இவர் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.தனுஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர்.இதுகுறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை நாளை வெளியிடுவதாக ஒரு மாஸான போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.

இந்த படம் ராக்கி,சாணிக்காயிதம் பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் படமாக இருக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படம் ராணுவ வீரரின் கதையாக இருக்கும் என்று சில தகவல்கள் கிடைத்துள்ளன.இந்த அறிவிப்பினை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.