நானே வருவேன் படத்தின் விறுவிறுப்பான ரிலீஸ் ப்ரோமோ !
By Aravind Selvam | Galatta | September 26, 2022 20:48 PM IST

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நானே வருவேன்.
காதல் கொண்டேன்,புதுப்பேட்டை,மயக்கம் என்ன படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக செல்வராகவன் தனுஷுடன் இணைந்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த படத்தினை தமிழகத்தின் வெற்றிகரமான முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு , வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் இந்துஜா,யோகி பாபு,ஸ்வீடன் நடிகை Elli AvrRam,செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் டீஸர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
செப்டம்பர் 29ஆம் தேதி இந்த படம் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில் படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் சிலவற்றை படக்குழுவினர் வெளியிட்டுளள்னர்.இந்த ப்ரோமோ வீடியோக்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்