தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவர் நடிப்பில் கடைசியாக கர்ணன் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அடுத்ததாக தனுஷ் ஜகமே தந்திரம் நேற்று Netflix தளத்தில் வெளியானது.இதனை தொடர்ந்து D 43,அத்ராங்கி ரே,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் D44,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

தனது பிரம்மாண்ட ஹாலிவுட் படமான The Grey man படப்பிடிப்பில் கலந்துகொண்டு அதன் ஷூட்டிங்கை முடித்து சமீபத்தில் இந்தியா திரும்பினார் தனுஷ் விரைவில் கார்த்திக் நரேன் படத்தின் ஷூட்டிங்கை ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளார் தனுஷ்.

அடுத்ததாக Happy Days,Fidaa உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி மொழிகளில் உருவாகும் இந்த படத்தினை Sree Venkateswara Cinemas LLP தயாரிக்கின்றனர்.தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் தனுஷை சேகர் கம்முலா மற்றும் தயாரிப்பாளர்கள் நேரில் சந்தித்துள்ளனர்,இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.