அசுரன் படத்தின் வெற்றியை அடுத்து தனுஷ் பட்டாஸ் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியுள்ளார்.இதற்கு அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள D40 படத்தின் ஷூட்டிங்கையும் முடித்துள்ளார்.இதனை தொடர்ந்து பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜுடன் இணைகிறார்.

Dhanush Mari Selvaraj D41 Cast and Crew Details

கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் தொடங்கியது.மலையாள நடிகை ராஜிஷா விஜயன் இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.யோகி பாபு,லால்,அழகம் பெருமாள் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Dhanush Mari Selvaraj D41 Cast and Crew Details

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மேற்கு தொடர்ச்சி மலை பட புகழ் தேனீ ஈஸ்வர் மற்றும் படத்தின் எடிட்டராக செல்வா ஆர்.கே மற்றும் கலை இயக்குனராக ராமலிங்கம் உள்ளிட்டோர் பணியாற்றுகின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.