தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவரது ஜகமே தந்திரம் படம் சமீபத்தில் OTT-யில் வெளியானது.

இதனை தொடர்ந்து தனுஷ் மாறன்,அத்ராங்கி ரே,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

மாறன் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர்.கார்த்திக் நரேன் இயக்கும் இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.இந்த படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோஹனன் நடிக்கிறார்.இந்த படத்தில் ஸ்ம்ருதி வெங்கட்,சமுத்திரக்கனி,மஹேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதெராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது,இதற்கிடையே திருச்சிற்றம்பலம் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வந்தார் தனுஷ்.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது என்று படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.விரைவில் படத்தின் முக்கிய அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

dhanush maaran movie final schedule shoot started karthick naren malavika mohanan