பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தில் தனுஷுடன் இணைகிறார்.2016-லேயே தொடங்க வேண்டிய இந்த படம் சில காரணங்களால் தள்ளி போனது.Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

Dhanush Karthik Subburaj Film Title Not Yet Fixed

மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடிக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்ககிறார்,இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் லண்டனில் தொடங்கியது.

Dhanush Karthik Subburaj Film Title Not Yet Fixed

இந்த படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன் என படக்குழுவினர் டைட்டில் வைத்துள்ளனர் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இந்த செய்தி வெறும் வதந்தி தான் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

Dhanush Karthik Subburaj Film Title Not Yet Fixed

இதுவரை வந்த கார்த்திக் சுப்புராஜ் படங்களின் டைட்டில் அனைத்தும் கதைக்கு ஏற்றவாறு பிட்சா,ஜிகர்தண்டா,இறைவி,மெர்குரி,பேட்ட என ஒரே வார்த்தையில் இருக்கும்.எனவே இந்த படத்தின் டைட்டிலும் ஒரே வார்த்தையில் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dhanush Karthik Subburaj Film Title Not Yet Fixed

இது எம்.ஜி.ஆர் பட டைட்டில் என்பதால் தற்போதுள்ள ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஒரே வார்த்தையில் தான் இந்த டைட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வரும்வரை ரசிகர்கள் காத்திருக்கவேண்டும் என்று தெரிகிறது.

Dhanush Karthik Subburaj Film Title Not Yet Fixed