பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தில் தனுஷுடன் இணைகிறார்.2016-லேயே தொடங்க வேண்டிய இந்த படம் சில காரணங்களால் தள்ளி போனது.Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Dhanush Jagame Thanthiram Post Production Works

இந்த படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடித்துள்ளார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்,இந்த படத்தில் கலையரசன்,மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Dhanush Jagame Thanthiram Post Production Works

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் மே 1ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன என்றும் படம் குறித்த அறிவிப்புகள் மார்ச் கடைசியில் இருந்து வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.