தனது திரைப்பயணத்தின் ஆரம்பக்கட்டத்தில் உருவ கேலிக்கு ஆளான ஒரு நடிகராக இருந்து, விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் படிப்படியாக வளர்ந்து, ஆகச் சிறந்த நடிகராக உயர்ந்து, தற்போது கோலிவுட் - பாலிவுட் - ஹாலிவுட் என எல்லாப்பக்கமும் வெற்றிக்கொடி நாட்டி நடிப்பின் மன்னனாக ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து இருக்கிறார் நடிகர் தனுஷ்.

கடைசியாக தனுஷ் நடித்து வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம்  ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் வெகு விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே முதல்முறையாக தெலுங்கு திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ள தனுஷ் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் வாத்தி (SIR). சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் வாத்தி படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். J.யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள வாத்தி திரைப்படத்திற்கு நவீன் நூலி படத்தொகுப்பு செய்கிறார். வாத்தி திரைப்படமும் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. 

முன்னதாக இந்த ஆண்டு (2022) தனுஷ் நடிப்பில் மாறன், THE GREY MAN, திருச்சிற்றம்பலம் ஆகிய 3 திரைப்படங்கள் ரிலீசாகியுள்ளன. மேலும் 4வது படமாக நானே வருவேன் படமும் இந்த ஆண்டில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 5-வது படமாக வாத்தி திரைப்படமும் இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 2ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Mark the Date. Our #Vaathi / #SIR is getting ready to take classes from 2nd Dec 2022! 📕🖊️✨ #SIRMovieOn2ndDec #VaathiOn2ndDec @dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @Fortune4Cinemas @SitharaEnts #SrikaraStudios pic.twitter.com/mBvDl8b5cM

— Sithara Entertainments (@SitharaEnts) September 19, 2022