படத்திற்கு படம் தன்னை தானே செதுக்கி இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் பல கோடி சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராகவும் திகழ்பவர் நடிகர் தனுஷ். முன்னதாக இந்த வருடம் (2022) மாறன், திருச்சிற்றம்பலம், தி க்ரே மேன் ( ஹாலிவுட்) மற்றும் நானே வருவேன் என அடுத்தடுத்து அட்டகாசமான படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

அடுத்ததாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் தொடங்கிய கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த ஆண்டில் (2022) 4 திரைப்படங்கள் தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள நிலையில் 5-வது திரைப்படமாக வெளிவரவுள்ள திரைப்படம் வாத்தி. 

முதல்முறையாக தெலுங்கு மற்றும் தமிழ் தனுஷ் நடித்துள்ள வாத்தி (SIR) திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் வாத்தி படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

J.யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள வாத்தி திரைப்படத்திற்கு நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வாத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வாத்தி ரிலீசில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருகிற 2023 பிப்ரவரி 17ஆம் தேதி வாத்து திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

#Vaathi / #SIR Movie going to hit the theaters on 17 Feb 2023. ♥️#VaathiOn17Feb / #SIROn17Feb@dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @SitharaEnts @Fortune4Cinemas #SrikaraStudios @adityamusic @AdityaTamil_ pic.twitter.com/69YOuvpEqs

— Sithara Entertainments (@SitharaEnts) November 17, 2022