தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திர நாயகராக வளர்ந்து தற்போது உலக அளவில் முக்கிய நடிகராக வளர்ந்துள்ள நடிகர் தனுஷ் முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி(SIR) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

முன்னதாக தனது சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே யாரடி நீ மோகினி, குட்டி ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

தனுஷ் உடன் இணைந்து நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், முனீஷ்காந்த் ஆகியோர் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்ன GK படத்தொகுப்பு செய்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் இறுதிகட்ட சவுண்ட் மிக்ஸிங் பணிகள் அனைத்தும் நிறைவு செய்து ரிலீசுக்கு தயாராகிவிட்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

🔥Ready

See you all in theaters.🔥Aug18.

My sincere thanks to our #Thiruchitrambalam team@dhanushkraja @anirudhofficial @sunpictures @offBharathiraja @prakashraaj @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @omdop @editor_prasanna @jacki_art @AlwaysJani@theSreyaspic.twitter.com/lebfbPaiP9

— Mithran R Jawahar (@MithranRJawahar) August 14, 2022