கடந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களில் ஒன்று அயோக்யா. புரட்சி தளபதி நடித்த இந்த படத்தை வெங்கட் மோகன் இயக்கினார். டெம்பர் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் ராஷி கண்ணா ஹீரோயினாக நடித்திருந்தார். மக்கள் விரும்பும் கமர்ஷியல் படமாக அமைந்தது இந்த படம். 

ayogya

தற்போது இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கவுள்ள புதிய படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கலாட்டா செவிகளுக்கு எட்டியது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

dhanush

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தொடரி, பட்டாஸ் போன்ற படங்களில் தனுஷ் நடித்துள்ளார். இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார் தனுஷ். இளம் இயக்குனர்களுடன் தனுஷ் போன்ற உச்ச நட்சத்திரங்கள் இணைவது, தமிழ் திரையில் ஆரோக்கியத்தை சுட்டிகாட்டுகிறது.