பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தில் தனுஷுடன் இணைகிறார்.2016-லேயே தொடங்க வேண்டிய இந்த படம் சில காரணங்களால் தள்ளி போனது.Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

Dhanush in Palani Temple Inbetween D40 Shooting

D40 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடிக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்ககிறார்,இந்த படத்தில் கலையரசன்,மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Dhanush in Palani Temple Inbetween D40 Shooting

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று முடிந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் மதுரையில் நடைபெற்று வருகிறது.இதன் ஷூட்டிங்குக்கிடையே பழனி முருகன் கோவிலில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தரிசனம் செய்துள்ளார்.இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.