இந்திய திரை உலகின் இன்றியமையாத நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் தனுஷ் தமிழ், ஹிந்தி திரைப்படங்களைத் தாண்டி ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பட இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தி கிரே மேன் படம் ஜூலையில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகவுள்ளது.

தற்போது தெலுங்கு திரை உலகிலும் காலடி எடுத்து வைத்துள்ள தனுஷ் தெலுங்கு & தமிழ் என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். மேலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் இரட்டைவேடங்களில் தனுஷ் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்து வரும் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக உள்ள திரைப்படம் மாறன். தனுஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் மாறன் திரைப்படத்தை தமிழ் சினிமாவின் பிரபல இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.

தனுஷுடன் இணைந்து மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியன், மாஸ்டர் மகேந்திரன் & இயக்குனர் அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள மாறன் படத்திற்கு விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்ய ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள மாறன் திரைப்படம் வெகுவிரைவில் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக மாறன் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று (பிப்ரவரி 28ம் தேதி) ரிலீஸாகவுள்ள நிலையில், தற்போது ட்விட்டரில் மாறன் திரைப்படத்தின் ஸ்பெஷல் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் தனுஷின் மாறன் எமோஜி இதோ…